தமிழ் சினிமா வரலாற்றில் அதிக விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து வணிகரீதியாகவும் பெரிய வெற்றிபெற்ற படங்களின் வரிசையில் இணைந்த ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குனர் மணிகண்டன் இந்தப் படத்தில் கதை-திரைக்கதையை அறிமுக இயக்குனர் அனு சரணுடன் இணைந்து எழுதி இருக்கிறார். மணிகண்டனின் பெயரும் சில மாதங்களுக்கு முன் வெளியான ட்ரைலர் ஏற்படுத்திய ஈர்ப்பும் இந்தப் படம் திரைப்பட ரசிகர்கர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்த உதவின. அந்த ஆவலைத் ’கிருமி’ படம் தக்கவைக்குமா?