செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (10:48 IST)

தடுப்பூசி ஒன்றுதான் மக்கள் உயிரை பாதுகாக்கும்: நடிகர் விவேக்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் தமிழகத்தில் தினமும் சுமார் 7,000 பேர் பேர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு திரையுலக பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் தற்போது நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தடுப்பூசி ஒன்றுதான் மக்கள் உயிரை பாதுகாக்கும் என்றும் பொருள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதே சிறந்த தடுப்பு நடவடிக்கை என்றும், எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு முகக்கவசம் அணியுங்கள்’ என்றும் கூறியுள்ளார்