விஜய் அடுத்த படத்தின் டைட்டில் தாறுமாறு?


Ashok| Last Updated: திங்கள், 16 நவம்பர் 2015 (19:35 IST)
அட்லீ இயக்கி வரும் விஜயின் 59 வது படத்தின் டைட்டில் தாறுமாறு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

விஜய் தற்போது இளம் இயக்குனர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்படிப்பு சென்னை சுற்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் தீவிர மழை பெய்து வந்தாலும் படக்குழுவினர் படப்பிடிப்பை தொடர்ந்து நடந்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இப்படத்திற்கு காக்கி, வீரன் போன்ற டைட்டில் வைக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த தலைப்புகளையெல்லாம் தவிர்த்து விட்டு ‘தாறுமாறு’ என்று புதிய தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவில் இருந்து விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. 
 
இந்நிலையில் தற்போது, விஜயின் 59வது படத்திற்கு தாறுமாறு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதால் இந்த படம் தாறுமாறாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு இடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்திற்கு விஜய் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டது.  
 
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் பெரும்பலான வேலைகள் முடிந்து விட்டதால் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :