1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
  4. Varalakshmi video about election awareness

அரசியல்வாதிகளை நாளை செஞ்சிருவோம்: வரலட்சுமி வீடியோ வைரல்

வரலட்சுமி
அரசியல்வாதிகளை நாளை ஓட்டு போட்டு செஞ்சிடுவோம் என வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 
நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பதைவிட நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று யோசிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதேபோல்  அரசியல்வாதிகள் நமக்கு என்ன செய்தார்கள் என்பதை விட நாம் அரசியல்வாதிக்கு என்ன செய்தோம் என்று காட்ட வேண்டும். நாளை அரசியல்வாதிகளை செஞ்சுடுவோம். ஒரு நாள் ஒரு ஓட்டு நீ யாருன்னு காட்டு’ என்று வரலட்சுமி அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…ரசிகர்கள் அதிர்ச்சி