வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2023 (09:51 IST)

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 3வது நாளாக தொடரும் சோதனை.. மகன் வீட்டிலும் சோதனையா?

தமிழக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பதும் அவரது வீட்டில் மட்டுமின்றி அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்றது என்பதையும் பார்த்தோம்.
 
அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மற்றும் நேற்று முன் தினம் சோதனை நடந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடந்து பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையை முழுமையாக முடிவடைந்தவுடன் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva