1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜேபிஆர்
Last Updated : செவ்வாய், 24 ஜூன் 2014 (11:48 IST)

கண்ணதாசனின் அரிய புகைப்படங்கள் - ஒரு தொகுப்பு

1. கண்ணதாசன் 1927 -ம் ஆண்டு ஜுன் மாதம் 24 -ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.
2. கண்ணதாசனின் தந்தையார் சாத்தப்ப செட்டியார், தாயார் விசாலாட்சி ஆச்சி. இவர்களுக்கு மொத்தம் 9 குழந்தைகள். கண்ணதாசன் எட்டாவது குழந்தை.
3. கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. அவர்களது குடும்பம் ஏழ்மையில் இருந்ததால் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார், சிகப்பி ஆச்சி தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்பட்டார்.
 

4. கண்ணதாசன் 8 -ம் வகுப்புவரை காரைக்குடி அமராவதி புதூரில் அப்போது செயல்பட்டு வந்த குருகுலம் பள்ளியில் படித்தார். 
5. கவிதைகள் எழுத ஆரம்பித்த பின் கண்ணதாசன் என புனைப்பெயர் வைத்துக் கொண்டார். அதுவே பிறகு நிலைத்த பெயராகவும் மாறியது.
6. கண்ணதாசன் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களும், 232 புத்தகங்களும் எழுதியுள்ளார். அதில் வனவாசம், அர்த்தமுள்ள இந்து மதம் ஆகியவை புகழ்பெற்றவை.
 
7. கண்ணதாசன் கன்னியின் காதலி படத்தில் பாடல் எழுதி பாடலாசிரியராக சினிமாவில் நுழைந்தார். அவர் எழுதிய முதல் பாடல், கலங்காதிரு மனமே, என் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே.
 

8. சினிமாவுக்கு வரும்முன் 1945 -ல் திரை ஒளி பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றினார். பிறகு அங்கிருந்து விலகி சண்டமாருதம் பத்திரிகையில் இணைந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் அந்தப் பத்திரிகையை நடத்தி வந்தனர்.
9. கண்ணதாசன் சொந்தமாக தொடங்கிய பத்திரிகை தென்றல்.
10. கண்ணதாசனின் அனுபவ மொழிகள் புகழ்பெற்றவை. தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.
 

11. யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே. ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.
12. மனிதர்கள் பெறும் புகழ் இரண்டு வகைப்படும். ஒன்று பெற்றுச் சாவது. இன்னொன்று, செத்து பெறுவது. சரித்திரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பெற்றுச் செத்தவர்கள். கோடிக்கணக்கானவர்கள் செத்து பெற்றவர்கள்.
13. கண்ணதாசன் தனது கொள்கைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும் அடிக்கடி மாற்றிக் கொண்டவர்.

அதனால் அதிக விமர்சனத்துக்குள்ளானவர். ஆனால் அவரது கவிதைகளும் பாடல்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு இன்றும் தமிழ் சமூகத்தை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. 
 
 
 

கண்ணாதாசனின் அரிய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு








கண்ணாதாசனின் அரிய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு








 


 



 
இன்று கவியரசரின் 88ஆவது பிறந்த நாள்.