Daily Horoscope
✕

மீண்டும் 300 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ்.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

Written By Siva
Updated: புதன், 24 ஜனவரி 2024 (11:32 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்கு சந்தை 500 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று மீண்டும் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது என்பதும் ஆரம்பத்திலேயே 300 புள்ளீகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய பங்குச் சந்தையில்  மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்து 70 ஆயிரத்து 663 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 21,338 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது  இன்றைய பங்குச்சந்தையில் இண்டஸ் பவர், நால்கோ, ஆதித்ய பிர்லா, பவர் பைனான்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆக்சிஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட்ஸ், டெல்டா கார்ப் ஆகிய பங்குகளின் விலை  சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments