தொடர்புடைய செய்திகள்
- அந்த ஆசிரியர் பெயர் ஜான்சன், ஜஹாங்கீர் என இருந்திருந்தால்..? பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு! - எம்.பி சு.வெங்கடேசன் பதிவு!
- மதுரை - சென்னை எழும்பூர் விரைவு ரயில் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- டெல்லியில் பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் பெற்றோர்..!
- சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் 3 பயணிகளிடமிருந்து 64 லட்சத்து 2000 மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!
- இன்றிரவு சென்னையில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!
4 நாட்களாக மாறாத தங்கம் விலையில் இன்று திடீர் மாற்றம்.. சென்னை நிலவரம்..!
கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமின்றி ஒரே விலையில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஐம்பது ரூபாய் உயர்ந்தும், ஒரு சவரன் 400 ரூபாய் உயர்ந்தும் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,720 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 53,760 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,175 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,400 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 92.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 92,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
