Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் இவ்வளவு அதிகமா?

Written By Siva
Updated: வெள்ளி, 7 ஜூன் 2024 (11:43 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
 
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு திடீரென 200 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து  ரூபாய்  6,840 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 உயர்ந்து ரூபாய் 54,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,310 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,480 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

கர்நாடகாவில் SIR மூலம் 1 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம்.. காங்கிரஸ் அரசு என்ன செய்ய போகிறது?

தலைமை தேர்தல் ஆணையர் இடைநீக்க மனு: பதிலளிக்க மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் 10 நாட்கள் அவகாசம்

தொடர் தோல்வி.. வெட்கமாத்தான் இருக்கு!.. சீமான் பேட்டி...

கரூரிலேயே கதையை முடிச்சிருந்தா!.. திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!...

1000-க்கு மேல் வாங்கினா ஆன்லைன் பேமெண்ட்!.. குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டாஸ்மாக்..

அடுத்த கட்டுரையில்
Show comments