தொடர்புடைய செய்திகள்
- IPL 2024: சன்ரைசர்ஸ் சாதனையை முறியடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று CSK vs SRH மோதல்!
- நாம் இந்த தவறை செய்தாலே மேட்ச்சை இழக்கிறோம் என்று அர்த்தம்… குஜராத் கேப்டன் கில் ஆதங்கம்!
- பஞ்சாப்பைக் காப்பாற்றிய ஏலத்தில் தவறாக எடுக்கப்பட்ட ஷஷாங்க் சிங்!
- சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்.. முழு விவரங்கள்..!
- IPL-2024: பஞ்சாப் கிங்ஸ்- குஜராத் டைட்டைன்ஸ் அணிகளிடையே டாஸ் அப்டேட்
தங்கம் விலை குறைந்தாலும் ரூ.52,000க்குள் வரவில்லையே? பொதுமக்கள் அதிருப்தி
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தங்கம் விலை உச்சத்திற்கு சென்றது என்பதும் குறிப்பாக ஒரு சவரன் 52 ஆயிரத்துக்கும் அதிகமாக சென்றது என்பதை ஏன் பார்த்தோம்.
இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு 360 குறைந்துள்ள நிலையில் இன்று ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ரூபாய் 6,510 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 குறைந்து ரூபாய் 52,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,980 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 85.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 85000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
