1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் சுமார் ரூ.700 உயர்வு..!

சென்னை
தங்கம் விலை கடந்து சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் கடந்த ஒரே வாரத்தில் ஒரு சவரன் தங்கம்  சுமார் 700 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்றும் தங்கம்  ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5875.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து  ரூபாய் 47000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6345.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50760.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 80.50எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் 98 % மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கி விட்டோம்: முதல்வர் ஸ்டாலின்