1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னை விலை நிலவரம்..!

சென்னை
இஸ்ரேல் நாட்டில் போர் நடந்ததால் கடந்த சனிக்கிழமை திடீரென ஒரு சவரனுக்கு 500 ரூபாய்க்கு மேல் தங்கம் விலை ஏறிய நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்து உள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து ரூபாய் 5372.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 56 குறைந்து  ரூபாய் 42976.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5842.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46736.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 75.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நாகை -இலங்கையை அடுத்து நாகை - சிங்கப்பூர் பயணிகள் கப்பல்.. வர்த்தகர்கள் வேண்டுகோள்..!