1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (12:21 IST)

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.120 உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை 15 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் விலை 120 ரூபாயும் உயர்ந்துள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5565 என்றும் ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 520 என்று விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் வெள்ளி ஒரு கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஒரு கிலோ ரூ.80000 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 
Edited by Mahendran