தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
- சென்னை ஐகோர்ட் நீதிபதியாக முன்னாள் பாஜக பிரபலம்.. வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு!
- வரலாறு காணாத விலையேற்றம் - தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!
- ராமநாதபுரம் - சென்னை விமான சேவை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்
- சிம்புவின் பத்து தல படத்தின் ஓடிடி உரிமம்… கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
திடீரென தலைகீழாக சரிந்த தங்கம் விலை. என்ன ஆச்சு?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் குறிப்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு பின்னர் திடீரென பயங்கரமாக உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் திடீரென ஒரு கிராமுக்கு 65 ரூபாய் குறைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ரூபாய் 5440.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 குறைந்து ரூபாய் 43520.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5802.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46416.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 140 காசுகள் குறைந்து ரூபாய் 76.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76400.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
