நேற்றைய உச்சத்திற்கு பின் இன்று மீண்டும் சரிந்த பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!
நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்த நிலையில், இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது. இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பங்கு சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டே வந்ததால், முதலீட்டாளர்கள் அச்சமடைந்த நிலையில், நேற்று திடீரென சென்செக்ஸ் 1400 புள்ளிகளும் உயர்ந்ததால், முதலீட்டாளர்களுக்கு லட்சக்கணக்கில் லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 355 புள்ளிகள் குறைந்து 79 ஆயிரத்து 591 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்கு சந்தை நிற்கும் 82 புள்ளிகள் குறைந்து 24,072 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், மாருதி, ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. டிசிஎஸ், சன் பார்மா, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எச்சிஎல் டெக்னாலஜி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva