வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (16:36 IST)

முதல்முறையாக உச்சம் தொட்டம் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 64 ஆயிரத்தை தொட்டுள்ளது என்பது அதேபோல் நிஃப்டி 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 64 ஆயிரம் புள்ளிகளையும், நிஃப்டி 19 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டியது
 
ஆனால் அதே நேரத்தில் இன்றைய பங்குச்சந்தை நிறைவடையும்போது சென்செக்ஸ் 63915 என்றும், நிப்டி 18972 என்றும் வர்த்தகம் முடிந்துள்ளது.
 
நாளை பக்ரீத் என்பதால் பங்குச்சந்தைக்கு விடுமுறை என்பதால் நாளை மறுநாள் வெள்ளியன்று பங்குச்சந்தை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva