1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. No changes in petrol diesel price in Chennai

210வது நாள்… சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று 210 ஆவது நாளாக மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் ஒரு சில மாநில நகரங்களில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும் சென்னையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என நேற்று மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறிய நிலையில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
சபரிமலையில் 30 நாளில் 19.38 லட்சம் பக்தர்கள் தரிசனம்!!