1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold price in Chennai increases

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு!

தங்கம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.35,152-க்கு விற்பனை. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  
 
மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி இரண்டரை சதவீதம் குறைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக தங்கத்தில் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டுவருகிறது. 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.35,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.4,394-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்
விடிய விடிய குதுகலம்... Vi வழங்கும் அதிவேக டேட்டா சலுகை!