1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and Silver Prices Remain Unchanged in Chennai Today

ரூ.10,000க்கும் மேல் எகிறிவிட்ட ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

தங்கம்
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ₹9,700-க்கு விற்பனையான நிலையில், நேற்று அதன் விலை ₹10,150-ஐ எட்டியது. இது, ஒரே வாரத்தில் ஒரு கிராமுக்கு சுமார் ₹500 அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
 
இன்று  சென்னையில் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையான ₹10,150-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த விலை ஏற்றம் ஒருபுறம் இருந்தாலும், தங்கம் விலை இன்னும் அதிகமாக உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
 
பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, இன்னும் சில மாதங்களில் ஒரு கிராம் தங்கம் ₹1 லட்சம் என்ற மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல், தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களை உற்சாகப்படுத்தினாலும், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று சென்னையில் தங்கம், வெள்ளி விலை விபரங்கள்:
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,150
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,150
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,200
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,072
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,072
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 88,576
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  88,576
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 140.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 140,000. 00
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தொடர்ந்து உயர்ந்து வரும் இந்திய பங்குச்சந்தை.. டிரம்ப் வரிவிதிப்பால் எந்த பாதிப்பும் இல்லை..!