செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:00 IST)

சிலிண்டர ஓரம் போட்டு அடுப்புல சமைங்கடா... 810 ஆனது விலை!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.

 
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து பிப்ரவரி மாதத்திலும் இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு ரூ.785-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது பிப்ரவரியில் 3 ஆம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810 ஆக அதிகரித்துள்ளது. 
 
பிப்ரவரி ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்துள்ளது. தொடர்ந்து கேஸ் விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.