குறிப்பாக: முதல் யாம பூஜையில் பால், நெய்ஈ தயிர், பசு கோமயம் ஆகியவற்றைக் கலந்த பஞ்ச கௌவியம் கொண்டு அபிஷேகம் செய்யலாம். அதேபோல், வில்வ இலைகள் மற்றும் தாமரை ஆகியவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தல் வேண்டும். அதற்கு நைவேத்தியமாக பயத்தம் பருப்பும் யசூர் வேதமும் ஓத வேண்டும்.
இரண்டாம் யாமத்தில் சந்தனம் மற்றும் தாமரை மலர்களைச் சூடி பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பாயசம் நைவேத்தியமாகப் படைக்கலாம். இப்போதும் யசூர் வேதம் ஓதுவார்கள்.
மூன்றாம் யாமத்தின் போது தேன் அபிஷேகம் சிறந்தது. அதோடு கற்பூர முல்லை, ஜாதி முல்லை ஆகியவற்றை போடலாம். இப்போது எள் சாதம் கொண்டு நைவேத்தியம் செய்யலாம். இந்த சமயத்தில் சாம வேதம் ஓத வேண்டும்.
நான்காம் யாம பூஜையில் கரும்புச்சாறால் கழுவி அர்ச்சனை செய்து குங்குமப்பூ மற்றும் நந்தியாவட்டை பூக்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம். இப்போது அதர்வண வேதம் ஓதி, வெண் சாதம் நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.