வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. சிவராத்திரி ஸ்பெஷல்
Written By Sasikala

மகா சிவராத்தியின் விரத மகிமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து சிவ ஆலயங்களிலும் பல சிரப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் மூவேழு தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்கின்றன புராணங்கள்.
சிவபெருமான் அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்  சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் கவலைகள் அனைத்தும் தீரும். காரிய வெற்றியும் ஏற்படும் என்கின்றன புராணங்கள். 
 
பிரம்மதேவன், திருமால், குபேரன், இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி பகவான் உள்ளிட்ட தேவர்கள் பலரும் சிவராத்திரி விரதத்தைத் கடைபிடித்து உயற்ந்த நிலையை அடைந்தார்கள் என்று புராண கதைகள் கூறுகின்றன.
 
விரத மகிமை:
 
பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம் புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெங்காலம்  கடைபிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பலமுறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு  சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது என்கின்றனர்.