பாஜகவின் அசாத்திய வெற்றி எப்படி சாத்தியமானது?

modi
Last Modified வியாழன், 23 மே 2019 (19:06 IST)
17 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 
 
காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் மிகக் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளன. இதனால் பாஜக தணிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
உறுதியான முடிவுகள் தெரியவர இன்னும் கால தாமதம் ஆனாலும், பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாஜக கட்சி குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க கோர போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
மே 26 அன்று ஆட்சி அமைக்க இருப்பதாகவும், இது குறித்து இன்று நடைபெறும் பாஜக கட்சி கூட்டத்தில் கலந்து விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. பாஜக மீது கடும் அதிருப்திகள் இருந்த போதும் பாஜகவின் இந்த வெற்றி அசாத்தியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 
 
பிற மாநிலங்களில் வாக்குகளை வாங்க பாஜக காஷ்மீர் விவகாரத்தை பயன்படுத்தி கொள்கிறது என்றுன் பேச்சு எழுந்துள்ளது. அதேபோல், பாஜக மட்டுமே இந்தியாவை காப்பாற்றும் என புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பேசி பேசி, இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையை தேர்தல் வெற்றிக்கான துடுப்புசீட்டாக பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்றுவிட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :