1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: விருதுநகர் , வியாழன், 28 மார்ச் 2024 (14:27 IST)

ராதிகா என்னை மகனே என்று அழைத்தில் தவறில்லை-விஜய பிரபாகரன்!

விருதுநகர் நாடாளுமன்ற அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். 
 
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
 
அப்பா இல்லாத நிலையில் எவ்வாறு அரசியலை பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு?
 
அப்பா இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய பலவீனம் தான்.
எங்க அப்பா இல்லாத நேரத்தில் அவர் சம்பாதித்த பேரும் புகழும் எங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும் நிச்சயமாக நாங்கள் அமைத்து இருக்கின்ற கூட்டணி மிகப்பெரிய கூட்டணி.
அப்பா இல்லாத நேரத்தில் அண்ணன் மாதிரி முக்கியமானவர்கள் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து எங்களுக்கு உழைக்க தயாராக உள்ளனர்.
 
அவர்கள் வழிகாட்டில் அப்பாவின் கனவில் நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
 
விருதுநகர் தொகுதியில் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அறிந்து கொண்டீர்களா என்ற கேள்விக்கு?
 
எல்லாவற்றிற்கும் தயாராகவே இருக்கிறோம் நேற்று தான் வேட்பு மனு தாக்கல் செய்தோம் இன்னும் டீப்பா தொகுதிக்குள் செல்ல செல்ல தான் முழுமையான குறைகள் தெரியும் நிச்சயமாக என்னென்ன குறைகள் உள்ளது என்று தெரிந்து அவற்றை பூர்த்தி செய்ய தயாராக உள்ளோம்.
 
கேப்டனின் மகனாக இருந்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க சிறந்த முறையில் தீர்த்து வைக்க உள்ளோம்.
 
ராதிகா சரத்குமார் உங்களை மகன் என்று கூறியது குறித்த கேள்விக்கு?
 
நானும் ராதிகா மேடம் மகளும் சிறுவயதில் இருந்து ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளோம் அவர்களிடம் பேசி உள்ளம் பழகியுள்ளோம்.
 
நிச்சயம் அவர்கள் கூறியது போல் மகன் என்று கூறுவது ஏற்கக் கூடியது தான் வயது வித்தியாசம் இது நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயம் ஓட்டாக மாறும் என்பதில் ஒன்றும் தெரியவில்லை.
 
சரத்குமார் சார் கேப்டன் மூலமாகத்தான் அறிமுகமானார். புலன் விசாரணை படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
சென்னையில் இருக்கும் நீங்கள் விருதுநகர் போட்டியிடுவதால் அடிக்கடி விருதுநகர் வர சிரமம் இல்லையா என்ற கேள்விக்கு ?
 
சென்னையிலிருந்து மதுரை வர ஏகப்பட்ட விமானங்கள் உள்ளது
மக்களின் பிரச்சினைகள் கூறினால் ,ஒரு மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரை வந்துவிடலாம்.
மக்களின் எந்த பிரச்சனைகள் எனக் கூறினாலும் உடனடியாக வந்து விடுவேன் எங்க அப்பா மக்கள் பிரச்சினை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
மக்கள் எங்களை ஜெயிக்க வைத்தால் நாங்கள் விருதுநகரில் வீடு கட்டி வந்து விடுவோம் மதுரையில் வந்து விடுவோம் எல்லாவற்றிற்கும் வாய்ப்பு உள்ளது.
 
ராஜேந்திர பாலாஜி அண்ணன் எங்க வீட்டில் கூட தங்கி கொள்ளுங்கள் என கூறினார்.
 
தேர்தல் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு?
 
பிரச்சாரம் எப்போது துவங்க வேண்டும் என்று கூட்டணி கட்சி தலைவர்களிடம் தான் பேசி வருகிறோம் பிரச்சாரம் ஆரம்பிக்கும் போது கண்டிப்பாக அனைவரும் தகவல் கூறி அழைத்துக் கொள்வோம் என  கூறினார்.