1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (13:01 IST)

நீலகிரி மாவட்டத்தை ஒதுக்கிய திமுக..! ஒரு திட்டங்களும் இல்லை..! இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

edapadi
நீலகிரி மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் திமுக கொண்டு வரவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் தற்போது சூடு பிடித்துள்ளது. தமிழக முழுவதும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
 
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் போதை பொருள் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். மு.க ஸ்டாலின், உதயநிதி, போதை பொருள் கடத்தலில் கைதான ஜாபர் சாதிக் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை காட்டி அவர்  கடுமையாக விமர்சித்தார்.
 
மேலும் எந்த ஒரு பெரிய திட்டத்தையாவது தமிழகத்தில் திமுக கொண்டு வந்துள்ளதா என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். 
 
நீலகிரி மாவட்டத்தை திமுக புறக்கணித்துள்ளதாகவும், இங்குள்ள மலைவாழ் மக்கள், நோய்வாய்ப்பட்டால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது என்றும் எடப்பாடி தெரிவித்தார்.

 
இந்த நிலை மாற வேண்டும் என்றால் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.