ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2019 (17:41 IST)

வாக்காளர்களுக்குப் பணம் ! துரைமுருகன் மகன் மீது வழக்குப் பதிவு ? அதிர்ச்சியில் திமுக

அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வேலூரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகண் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடு, பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
 
அப்போது ரூ. 10 லட்சம் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து கடந்த 1 ஆம் தேதி வேலூரில்  உள்ள காட்பாடி பள்ளிக்குப்பத்தில் துரைமுருகனின் உதவியாளர் வீட்டில் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் மூட்டையில் பணம் பதுக்கி இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினர்.
 
இதனையடுத்து திமுக வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது எப்.ஐ.ஆர் பதிய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
 
மேலும் இது நேரடியாகப் பிடிக்கப்படாத குற்றம் என்பதால் காட்பாடி மாஜிஸ்ரேட் ஜெயசுதாகரிடம் அனுமதி கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.
 
பின்னர் வேலூர் மாவட்ட எஸ்பி பிரவேஸ்குமார் மாஜிஸ்த்ரேட்டுடப் நேற்றிரவு ஆலோசனை ண்டத்தியதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் வேட்பாளர் துரைமுருகன் கதிர் ஆனந்த், அவரின் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீது ( மக்கள் பிரதிநிதித்துவசட்டம் 125(ஏ) ஐபிசி 171(இ) மற்றும் 171( பி(2) ஆகிய   மூன்று பிரிவுகளில் காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.