1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (23:36 IST)

மகிழ்ச்சியின் தேடல்!- சிறப்புக் கட்டுரை

happy
மகிழ்ச்சியின் மனதோடு செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் வெற்றியின் மகுடத்தில் தரிக்கப்பட்டு அழகுபார்க்காமல் அது போனதில்லை என்பது என் கருத்து.

இந்த மகிழ்ச்சியை அறுவடை செய்ய பல சோகத்திற்கு நம் மனதைக் காவு கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலை எதற்காக நம்மிடம் தொற்றிக் கொள்கிறது?

வாழ்க்கையின் பாதையில் ஆயிரம் போராடச் செடிகளைப் பார்க்க முடிகிறது. ஆனால், அந்தப் போராட்டச் செடியில் இருந்து பூக்கும் பூவில் இருந்து நமக்கான வாய்ப்புத் தேனையும், அதன் வாசம் எனும் மகிழ்ச்சியையும் எப்படிப் பெற்றுக்கொள்வதென நாம் முதலில் கண்டுகொள்ள வேண்டும்.

அன்புக்குத்திற்குள் பாசமென்ற கல்லெறியும்போது, அதில் இருந்து எம்பிக் குதித்துப்போகும் அந்தக் பாசக்கல்லிற்குத்தான் வாழ்க்கையென்ற நிலத்தில் மகிழ்ச்சி எனும் மாளிகையைக் கட்டுவதற்கான தெம்புகிடைக்கிறது.

எதற்காகவும் யாருக்காகவும் நமக்கான செயலை விட்டுக் கொடுக்கக்கூடாதென்று நாம் நினைப்பதைக் காட்டிலும், அந்தச் செயலால் நாமும் இந்தச் சமுதாயமும் என்ன நன்மையடைகிறதென்று நாம் ஒருகணம் யோசித்தால், எக்காரணத்தைக் கொண்டும் அது சுய நலப் பீடபூமிக்குள் யாரையும் தள்ளிவிடாது; அதனால் யாருக்கும் எந்தப் பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று கருதுகிறேன்.

சிலருடைய வாழ்க்கையில் நேற்று நடந்த தோல்விகளைப் போட்டு மனதில் குழப்பிக்கொண்டு, அடுத்த நாளை இருட்டில் தள்ளிவிடுவார்கள்.

இன்றைய காலத்தில் குழந்தைகளின் மனோதிடத்தை வளர்ப்பதற்குக் கற்றுக்கொடுப்பதற்குள், தொழில் நுட்ப தரிசனத்தைக் கண்ணில் காட்டி, காக்கா வலிப்பு வந்தரின் கையில் இரும்புச்சாவி கொடுப்பதுபோல் அவர்கள் அழும்போதெல்லாம், செல்போனையும் கேமையும் கொடுப்பதன் விளைவு மட்டுமல்ல அவர்கள் எதையெல்லாம் கேட்டாலும் அத்தனையும் வாங்கிக் கொடுப்பதற்கான வசதியில்லையென்றாலும் கடன் வாங்கியாவது அவகளின் தேவையை நிறைவேற்றுவதிலுள்ள சிக்கல் தான், அதிகச் செல்லம்.

ஒரு கட்டத்தில், அவர்களுக்குத் தேவையானது கிடைக்காமல் போனலோ, குடும்பச்சூழலில் அவர்களுக்குக் கிடைகக்வில்லை என்றாலோ குறுகிய மனப்பான்மையிலேயே உழன்று, மன உளைச்சலுக்கு இலக்காகி தங்களின் வாழ்க்கைப் பயணத்தை தற்கொலை என்ற பெரும் பள்ளத்தில் வீழ்ந்து முடித்துக் கொள்கிறார்கள்.

சிறு வயதில் இருந்து தனக்கு இது தேவை, இது தேவையில்லை என்று ஒவ்வொன்றிற்கும் பகுத்துணரும் பக்குவத்தை மனதில் விதைத்தால், செல்போன் இல்லையென்றால் தூக்கிட்டுத் தற்கொலை; கேம் விளையாடியதைக் கண்டித்தால் விஷமருந்து குடித்துத் தற்கொலை, பொதுத்தேர்வு எழுதும் மாணவி அதைப்பற்றிய அக்கறையின்றி காதலில் வீழ்ந்தால் எப்படி இருக்கும்? அதைப் பார்த்துக் கொண்டு பெற்றோர் என்ன செய்வர்? திட்டினால் விபரீத முடிவு எடுப்பூர்கள் என்ற பயம் உள்ளுக்குள் இருந்தாலும், திட்டாவிட்டால் படிப்புக் கெட்டுவிடும் என்பதால் அதையும் மீறி கண்டிக்கும்பொது, அதினாலும் மனம் உடைந்து இறுதிமுடிவைத் தேடிக் கொள்ளுகிறதை மாணவர்களும் மக்களும் கைவிட வேண்டும்.

இருக்கின்ற வாழ்க்கையில் ஆயிரம் நிறைகுறைகள் நம்மைச் சுற்றிலும் இருக்கும்; ஏன் நமக்குள் இருக்கும்! இதில் எது நமக்குத் தேவை என்பதில் மட்டும் கவனம் செலுத்தித் தேவைய்ல்லாததில் இருந்து கவனத்தை விலக்கிக், தன் இளம் வயதில் சாதனை நோக்கிய பயணத்திற்குத் தயார்படுத்த வேண்டும். இதுவே, படித்து முடித்தும், எதிலும் வெற்றியில்லை என்பவர்கள் அடுத்த புதுப்புது முயற்சிக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படி வீட்டிலும், பள்ளியிலும், பெற்றோர், ஆசிரியர்கள் கண்டிப்பதற்கே தவறான முடிவெடுத்தால், அடுத்து, பள்ளி முடித்து கல்லூரி முடித்து, வேலைக்குச் என்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் பணியிடத்தில் எத்தனை பணிச்சுமை, இடையூறுகள், அரசியல், உள்ளடிவேலைகள் சம்பள பிரச்சனைகள் இதெல்லாம் இருக்கும். இதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்.

நமக்குத் தவறுகள் நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியமும், நாமே தவறு செய்யாமல் விழித்திருந்து வாழ்க்கையில் சாதிக்கின்ற மனோதிடமும், பெற்றோரின் மன நிலை பொருளாதா நிலை புரிந்து, ஒவ்வொன்றையும் செய்து வந்தால் நமக்கு எதிலும் குறைவு வராது. அந்தக் காலத்தில் எல்லாம் எப்படி இருந்தார்கள் மாணவர்கள்! அவர்களுக்குப் படிப்பும், எதிலாவது சாதிக்க வேண்டுமென்ற எண்ணமும் நெஞ்சத்த்தில் நிறைந்திருந்தது. தன் முதல் சிவில் சர்வீர் தேர்விலேயே தேர்வாகி தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்றவராகி, தமிழகத்திலேயே பொறுப்பு வகிக்கும் ஐஏஎஸ் ஆனார் இறையன்பு. இன்று தலைமைச் செயலராகி அப்பதவிக்குப் பெருமை சேர்த்துள்ளார், அவர் இளைஞர்களி எழுச்சிக்குப் பேசிவரும் பேச்செல்லாம் இளைஞர்களும் மாணவர்களும் கேட்க வேண்டும். அவருக்கு இல்லாத பணிசுமையா? ஒரு நாளில் எத்தனை கையெழுத்துகள், கோப்புகள், இதற்கிடையிலும், பேச்சு, எழுத்து, இலக்கிய உரையாடல், பத்திரிக்கை வாசிப்பு, புத்தகத்தில் அறிவுத்தேடல், அதிகாரிகளுடன் கலந்துரையாடல், முதல்வருடன் சந்திப்பு, பிரதமருடன்ஆலோசனை என்று எப்போதும் பரபரப்பாக இருப்பதற்கு அவர் இப்போதல்ல, தன் மாணவப் பருவத்திலிருந்தே, இளமைக்காலத்தில் ஆட்சியாளராகப் பதவியேற்கும் போதிலிருந்து தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டனர்.

அதனால், இன்றைய மிகப்பெரிய பதவியில் இருக்கும்போதும் அவரால் மா நிலத்தைச் சிறப்பாக நிர்வாகம் செய்து, தன் நேரத்தையும் மேலாண்மை செய்திஉ கொண்டு இளைஞர்களின் எழுச்சி நாயகனாக வலம் வருகிறார்.

அதனால் நாம் என்ன செய்கிறோம்? எதைச் செய்கிறோம்? எதை நோக்கிப் போகிறோம்? நம் வளர்ச்சியில் நிலையென்ன? என்பதைப் பற்றி அன்றாடம் யோசித்துக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாட்டா, தொண்ணூருகளில் இண்டிகோ ஆரம்பித்த புதிதில் ஏதோ கோளாறு ஏற்பட, அமெரிக்காவின் தலைசிறந்த நிறுவனமான போர்டின் உதவியை நாடினார். அதற்கு இந்தியர்களுக்கு எதற்கு இந்தத் தேவையில்லாத வேலை! அதுவும் கார் தொழில் நுட்பத்தில் என்று கேட்பதுபோல் அவரை அவமானப்படுத்தினர்.
tata

ரத்தன் டாட்டா சினம் கக்கவில்லை. பொறுமை காத்தார். அடுத்த சில ஆண்டுகளில் ராஜஷ்தானில் இருந்த போர்ட் கம்பெனியை இழுத்து மூட வேண்டிய நிலை எற்பட்டபோது, ஒரு பெரிய தொகை கொடுத்து அதைத் தொடர்ந்து இயக்க உதவினார்.

அடுத்து போட்டி அதிகமாகவே சமீபத்தில் போர்ட் நிறுவனத்தை மூடப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. உடனே, அமெரிக்காவின் போர்ட் நிறுவனத்தை விலைபேசி வாங்கினார் ரத்தன் டாட்டா. அதில், உலகில் சொகுசுக் காரான லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் ஆகியவை அடங்கும். தற்போது போர்ட் நிறுவனத்தை மட்டும் அவர் காப்பாற்றவில்லை; அங்குப் பணியாற்றிய தொழிலாளர்களையும் அதே நிறுவனத்தில் வேலை செய்யும்படி தக்க வைக்க உதவினார்.

இதற்குத் தக்க காலம் வரை பொறுத்திருந்து, ஏற்ற வேலை வரும் வரை நமக்கான வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும். டாட்டா அவமானப்பட்டதால் அவர் பழிவாங்கவில்லை. தன்னை மாய்த்துக்கொள்ளவில்லை; உலகிற்கே ஆக்கப்பூர்வமான வழியை தன் செயலில் வழியே காட்டியுள்ளார்.

எனவே, மகிழ்ச்சியின் தேடல் செய்யும் வேலையிலும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதிலும்தான் உள்ளது. அதற்காக எதையும் துணிந்து சந்திக்கும் போர்க்குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.