சர்ச்சைக்கு உள்ளான 'சாவித்ரி' பட போஸ்டர்கள்
சர்ச்சைகளுக்குப் பெயர் போன ராம்கோபால் வர்மா, தெலுங்கில் எடுக்கும் சாவித்ரி படத்தின் போஸ்டரிலேயே சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அவற்றுள் சில இங்கே.
இந்தப் படம் மாணவனுக்கும் - ஆசிரியைக்கும் இடையிலான ஈர்ப்பை பற்றியதாம். வர்மா பள்ளியில் படித்த போது இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்த டீச்சர் வர்மாவுக்குப் பிடித்தமானவராம். அவர்தான் படத்தில் வரும் சாவித்ரி. எனக்கு கிடைத்த சாவித்ரி போல், உங்கள் வாழ்க்கையிலும் பல சாவித்ரிகள் இருப்பார்கள் என்று வர்மா பெட்ரோலில் தீக்குச்சி கொளுத்திப் போட மகளிர் அமைப்புகள் சலங்கை கட்டாமல் ஆடுகின்றன.
படத்தின் போஸ்டர்களைக் கிழித்தெறிந்த மகளிர் அமைப்புகள், வர்மா ஒரு பொறுக்கி, மாணவர்களைத் தனது சினிமா மூலம் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார். அவர் இந்த போஸ்டரின் மூலம் தனது வக்கிர புத்தியைக் காட்டியிருக்கிறார். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.
என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்று கூறி மகளிர் அமைப்புகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் வர்மா.