1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. rajiv menon join with thalaivar 173

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

thalaivar 173
நடிகர் ரஜினி இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.. இந்த படத்திற்கு அடுத்து அதாவது ரஜினியின் 173-வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார்.. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.. ஏற்கனவே இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

தற்போது இந்த படம் தொடர்பான வேலைகள் நடந்து வருகிறது.. இந்த படத்தை முடித்துவிட்டு கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ரஜினியும் கமலும் பல வருடங்களுக்கு பின் இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.. இந்த படத்தை இயக்குவது நெல்சன் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜுவ் மேனன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.. அநேகமாக பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் இது பற்றி அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். ரஜினி அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில்தான் நடிக்க போகிறார்.. அப்படி இருக்கும்போது அதன்பின் நடிக்கும் படத்தின் அப்டேட் எப்படி வெளியாகும் என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஒருவேளை ரஜினியும் சிபியும் இணையவுள்ள படத்திற்குதான் ராஜுவ்மேனன் ஒளிப்பதிவு செய்யப் போகிறாரா என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. எப்படி இருந்தாலும் பிப்ரவரி முதல் அல்லது இரண்டு வாரத்தில் இதுபற்றிய தகவல் தெரிந்துவிடும்.
அடுத்த கட்டுரையில்
கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?