திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By papiksha
Last Updated : சனி, 22 பிப்ரவரி 2020 (12:42 IST)

அட்டகத்தி தினேஷின் "பல்லு படாம பாத்துக்க" பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் திறமைமிக்க வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் அட்டகத்தி தினேஷ். அட்டகத்தி , ஒருநாள் கூத்து, விசாரணை , குக்கூ , உள்குத்து, திருடன் போலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார். 
 
தற்போது டெம்பிள் மங்கிஸ் யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜன் இயக்கத்தில்  "பல்லு படமா பாத்துக்க"  என்ற  அடல்ட் காமெடி பேய் படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு  படத்தின் ஸ்டைலில் உருவாகியுள்ள இப்படம் 18+ இளைஞர்களை குறி வைத்து ரிலீஸாக இருக்கிறது. 
 
‘பல்லு படாம பாத்துக்க’ என்ற இரட்டை அர்த்தம் கொண்ட இப்படத்தின் டைட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். மேலும், இன்று மாலை இப்படத்தின் டீசர் ரிலீசாகும் என்ற அறிவித்துள்ளனர்.