1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (19:29 IST)

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இன்னொரு படம் ஏன்? ரஜினி குறித்த பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டபோது ரஜினியின் அதிகபட்ச காட்சிகள் அந்த திரைப்படத்தில் வரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்ததாம்
 
ஆனால் தற்போது அவரது உடல்நிலையை கணக்கில் கொண்டு ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைக்கும்படி ரஜினி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. எனவே இந்த திரைப்படம் கிட்டத்தட்ட குசேலன் திரைப்படம் போல் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வருவது போல் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது 
 
இதனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் அதனை ஈடுகட்டவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ரஜினிகாந்த் இன்னொரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய ஒரு குடும்பப் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்