பொங்கியெழுந்த ‘சூப்பர் ஸ்டார்’… வாயைத் திறக்காத ‘உலக நாயகன்’
ஃபெப்சி ஸ்டிரைக் விவகாரத்தில், உச்ச நட்சத்திரம் தன் கருத்தைத் தெரிவிக்க, எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கிறார் உலக நாயகன்.
ஃபெப்சி தொழிலாளர்களை மட்டும்தான் படப்பிடிப்புப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை என சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார், தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால். இதற்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் பாராட்டும், ஃபெப்சி தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியும் கிளம்பியுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு வராமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர் ஃபெப்சி தொழிலாளர்கள். இதனால், உச்ச நட்சத்திரம், தளபதி நடிக்கும் படங்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்கள் அப்படியே நிற்கின்றன.
இந்த விவகாரத்தில் தீர்வுகாண, உச்ச நட்சத்திரத்தை சந்தித்தார் ஃபெப்சியின் தலைவரான ஆர்.கே.செல்வமணி. எனவே, இருவரும் பேசி சுமூக முடிவு காணுங்கள் என அறிக்கை விட்டார் உச்ச நட்சத்திரம். காரணம், அவருடைய படப்பிடிப்பும் சிக்கலில் இருக்கிறது. ஆனால், அரசியல் குறித்து தினமும் சில கருத்துகளை ட்விட்டரில் வெளியிட்டு வரும் உலக நாயகன், இதைப்பற்றி வாய் திறக்கவில்லை. ஒருவேளை, உச்ச நட்சத்திரத்தைச் சந்தித்தது போல் தன்னையும் சந்தித்தால், அதன்பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருக்கிறாரா? அல்லது தன் படத்தின் ஷூட்டிங் எதுவும் தற்போது நடக்கவில்லையே என அமைதியாக இருக்கிறாரா? எனத் தெரியாமல் குழம்பி வருகின்றனர் சினிமாக்காரர்கள்.