திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Sasikala
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2017 (13:27 IST)

மது போதைக்கு அடிமையாகிய அந்த நடிகை; குற்றம்சாட்டும் முன்னாள் கணவர்!

சூப்பர் குடும்பம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆறுமிளா. அதன் பின்  பல படங்களில் நடித்த அவர் தென்னிந்திய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

 
வில்லன் நடிகர் ஒருவரை காதலித்து அவருடன் லிவ்விங் டூகெதராக வாழ்ந்தார். பின்னர் அவரை விட்டு பிரிந்து சின்னத்திரை நடிகரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரையும் விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில்  சின்னத்திரை நடிகரை நம்பி எனது வாழ்க்கையை இழந்து விட்டேன் என்று கூறியிருந்தார்.
 
இதுபற்றி அவர் கணவர் கூறிகையில், ஆறுமிளா மன அழுத்தத்தில் இருந்தார். படப்பிடிப்பின்போது என்மீது காதல் ஏற்பட்டது. திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினார். இதனால் வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். அப்போது எனக்கு 22 வயது. பின்னர் ஷார்ஜாவில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டேன். அவரும் அங்கு வந்து விட்டார். அதன்பிறகுதான் அவருக்கு  குடிப்பழக்கமும் போதை பழக்கமும் இருந்தது எனக்கு தெரியவந்தது. அவர் போதைக்கு அடிமையாகி இருப்பதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இதனால் அவரை விவாகரத்து செய்யும்படி எனது பெற்றோர்கள் வற்புறுத்தினார்கள். அதன்பிறகு  கேரளாவுக்கு சென்று வேறு பெண்ணை மணந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.