1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: திங்கள், 8 மே 2017 (22:47 IST)

அந்த சின்னப்பையனுக்கு நான் ஜோடியா? கொதித்தெழுந்த தமன்னா?

தெலுங்கில் தமன்னா நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்று தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், அந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.



 


அந்த நடிகரின் தொடர்ச்சியான மூன்று படங்கள் தோல்வி அடைந்தபோதிலும் அவருக்கு எப்படி அடுத்தடுத்து படங்கள் புக் ஆகின்றது என்பதே ஒரு புரியாத புதிராக உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கில் நடித்த அதே கேரக்டரில் நீங்களே நடிக்க வேண்டும் என்று தமன்னாவிடம் படக்குழுவினர் அணுகினார்களாம். ஹீரோ பேரை கேட்டதும் கடுப்பான தமன்னா, 'நான் 1000 கோடி வசூல் செய்த படத்தில் நடித்த பெரிய நடிகை, அந்த சின்னப்பையனுக்கு நான் ஜோடியா? என்று கேட்டு, படக்குழுவினர்களை தமன்னா விரட்டி அடித்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் கடந்த சில மணி நேரங்களாக கோலிவுட்டின் ஹாட் டாக் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் நாயகி வேடத்தில் நடிக்க இன்னொரு பெரிய நடிகையிடம் வலையை வீசியுள்ளனர் படக்குழுவினர். வலையில் அந்த நடிகை வீழ்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்