1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (10:30 IST)

மீண்டும் பிரபுதேவாவுடன் நயன்தாரா: விக்னேஷ் சிவனுக்கு சிக்கலா?

பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கு காதல் தோன்றி அது திருமணம் வரை சென்று பின்னர் திடீரென பிரேக் அப் ஆனது உலகிற்கே தெரியும். இந்நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 


நயன்தாரா நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாகவும், அதில் நயன்தாரா கேரக்டரில் தமன்னா நடிக்கவுள்ளதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்தது.

இந்த இந்தி ரீமேக்கில் வில்லன் கேரக்டரில் பிரபுதேவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் தமிழில் இந்த கேரக்டரில் நடிக்க இதுவரை நடிகர் தேர்வு செய்யப்படவில்லை

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த வில்லன் கேரக்டரில் தமிழிலும் பிரபுதேவாவிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நயன்தாராவுக்கு வில்லனாக பிரபுதேவா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் மீண்டும் நடித்தால் பழைய காதல் எட்டிப்பார்க்குமா? அப்படி பார்த்தால் புதிய காதலர் விக்னேஷ் சிவனுக்கு சிக்கலா? என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரிக்கும் இந்த படத்தை சக்ரிடோலட்டி இயக்கி வருகிறார்.