1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (22:30 IST)

ஜெய், அஞ்சலி காதல் முறிந்துவிட்டதா?

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகள் இணைவதும் பிரிவதும் அவ்வபோது நடக்கும் நிகழ்ச்சி என்றாலும் சமீபத்தில் காதல் வயப்பட்ட ஜெய், அஞ்சலி ஜோடி விரைவில் திருமணம் செய்து இல்லறத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஜெய், அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைந்து நடித்த 'பலூன்' திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும் மீண்டும் இருவரும் நடிக்கவில்லை. சமீபத்தில் ஜெய் ஒப்பந்தமான 'நீயா 2' படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ள நிலையில் இந்த மூவரில் ஒருவருக்கு அஞ்சலியை ஜெய் சிபாரிசு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஜெய், அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாகவும், அஞ்சலி தற்போது ஆந்திராவில் செட்டிலாகிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.