இணையுமா இந்த ஜோடி?
வெயில் காலத்தில் சருமப் பிரச்னையால் அடிக்கடி அவதிப்படும் இந்த நடிகைக்கு, மழைக்காலமான அக்டோபரில் கல்யாணத்தை நடத்தியே தீருவது என்று உறுதியுடன் இருக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். இதனால், கைவசம் உள்ள படங்களை உடனடியாக முடித்துக் கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
நடிகை கையிலோ, ஐந்தாறு படங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு படமும் ஆரம்பிக்கப்பட்டு, ஒவ்வொரு ஸ்டேஜில் அப்படியே நிற்பதுதான் பிரச்னை. ஷூட்டிங் ஆரம்பிக்காவிட்டால், அட்வான்ஸைத் திரும்பக் கொடுத்துவிடலாம். ஆனால், பாதி நாட்கள் நடித்த படத்தை என்ன செய்வது? எனவே, அந்த படங்களை எல்லாம் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொல்லி இயக்குநர்களிடம் கெஞ்சுகிறாராம் நடிகை.
இந்நிலையில், நடிகை கால்ஷீட் கொடுத்து ஆரம்பிக்கப்படாத ஒரே ஒரு படம் இருக்கிறது. அது, ‘சிவ’ நடிகருக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய படம். ‘சிவ’ நடிகருக்கு இரண்டு மாபெரும் ஹிட்களைக் கொடுத்த இயக்குநர், மூன்றாவது முறையாகவும் அவரை இயக்கப் போகிறார். இந்தப் படம் இன்னும் ஆரம்பிக்கப்படாததால், அதிலிருந்து விலகுமாறு வற்புறுத்துகிறார்களாம் மாப்பிள்ளை வீட்டார். அதனால், இந்த ஜோடி இணையுமா, இணையாதா? என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.