திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By VM
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (18:18 IST)

எப்படி தூக்கி எறியுவாங்கனு தெரியாது! மங்களகரமான நடிகைக்கு நேர்ந்த சோகம்!

சினிமா யாரை, எந்த உயரத்தில் வைக்கும் என்று யாருக்கும் தெரியாது, எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், எப்படி தூக்கி வெளியே எறியும் என்றும் யாருக்கும் தெரியாது. இதற்கு சிறந்த உதாரணமாகி விட்டார் கும்கி நாயகி.

இவர் நடித்த யானை படத்துக்கு அமோக வரவேற்பு, குழந்தை முகம், தெற்கத்தி கிராமத்து பெண் உடல்வாகு இருந்ததால், உடனே ஏற்றுக் கொண்டனர் . இவர்  அடுத்தடுத்த நடித்த அத்தனையும் சூப்பர் ஹிட். ராசியான நடிகையாக இருந்தவர், கடைசியாக உடல் எடை அதிகரித்த நிலையில், தாதா வேடத்தில் புகழ் பெற்ற  செம்ம செம்ம நடிகரின் படத்துக்கு பிறகு காணாமல் போய்விட்டார். இத்தனைக்கு இவர் நடித்த 11 படங்களில் 9 படங்கள் ஹிட். தாடி நடன இயக்குனரின்  படத்தில் மங்களகரமான அந்த நடிகை நடித்து வருகிறார். இந்த படம் எப்போது வெளியாகும் என்றே இன்று வரை தெரியவில்லை. கடைசியாக இரணடு  வருடங்களாக இவர் நடித்து எந்த படமும் வெளியாகவில்லை. சினிமா வாய்ப்பு இல்லாததால பரத நாட்டியத்தில் ஆர்வம் காட்டும் அவர், அந்த  நிகழ்ச்சிகளிலேயே பங்கேற்று வருகிறார்.   
 
இது தொடர்பாக மங்களகரமான நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், 'சினிமா யாரை எப்போ தூக்கி வைக்கும், கீழ எறியும்னு தெரியாது. எல்லா  நடிகைகளுமே கொஞ்ச நாளைக்குப் பிறகு ஃபீல்ட் அவுட் ஆகிடுவாங்க. அப்படி ஒரு சூழல் வர்றப்ப அடையாளம் தெரியாமப் போக நான் விரும்பலை' என்று  கூறியுள்ளார்.  எதிர்காலத்துல நடனப் பள்ளி ஆரம்பிக்கிறது லட்சியம் என்கிறார் அவர்.