1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. Director Falls for Malayalam actresses

மலையாள நடிகைகளிடம் மயங்கும் இயக்குநர்

தளபதி இயக்குநர்
தன் படத்தில் நடித்த மலையாள நடிகையைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ‘இளைய தளபதி’ பெயரைக் கொண்ட இயக்குநர். ஆனால், மோகம் முப்பது நாளில் தீர்ந்துவிட, இப்போது இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. நடிகை  பழைய மாதிரி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
 
இந்நிலையில், மலையாளத்தில் வெளியான ஒரு படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார். மேடியும், ‘பிரேமம்’ புகழ் டீச்சரும் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள். ஆனால், திடீரென அந்தப் படம் பிரேக் டவுன் ஆக, நடிகையை மட்டும் வைத்து அடுத்த படத்தை ஆரம்பிக்கப் போகிறார். அவரை நம்பியிருந்த மேடி, தற்போது நட்டாற்றில் நிற்கிறார். மலையாளம்னாலே தனி மயக்கம்தான் போலிருக்கிறது…
அடுத்த கட்டுரையில்
அனுமதி கேட்பாரா சங்கத் தலைவர்?