1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (16:28 IST)

புகைப்படம் எடுத்ததால் சண்டை…பொது இடத்தில் திட்டிய நடிகை

தன்னைப் படம் எடுத்ததால், போட்டோகிராபர்களைத் திட்டியுள்ளார் பாலிவுட் நடிகை ஒருவர். 


 

 
ரஜினி ஜோடியாக ‘கபாலி’யில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமாகிவிட்டார் இந்த பாலிவுட் நடிகை. அவர் குறித்த சர்ச்சைகளும் ஏகத்துக்கும் பிரபலம். மேலாடையில்லாமல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, நிர்வாணமாக நடிப்பது என அவரைச் சுற்றி எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சை இருந்துகொண்டே இருக்கும். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் போட்டோகிராபர்களுடன் சண்டை போட்டுள்ளார் இந்த நடிகை.
 
சைஃப் அலிகான் ஜோடியாக இவர் நடிக்கும் ‘பஜார்’ ஹிந்திப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்று வருகிறது. மதிய உணவு இடைவேளையில், கேரவனில் இருந்து இறங்கி மாலுக்குள் சென்றிருக்கிறார் நடிகை. அப்போது அங்கிருந்த போட்டோகிராபர்கள், அவரைப் படம் எடுத்தனர். இதனால் கோபமானவர், “என்னைக் கேட்காமல் எப்படி போட்டோ எடுக்கலாம்?” என்று கண்டபடி திட்டியதோடு, எல்லா புகைப்படங்களையும் அழித்த பின்னரே அவர்களை விட்டிருக்கிறார்.