வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Sasikala
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (15:09 IST)

லிவ்விங் டுகெதருக்கு பிறகு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள வெற்றி நடிகர்!

தமிழ்த் திரையுலகில் தற்போதைய காதல் கிசுகிசு என்றால் அது வெற்றி நடிகரும், அங்காடி தெரு நடிகை மட்டுமே. திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கப்பட்டது. வழக்கம் போலவே இருவரும் அதை மறுத்து வருகிறார்கள்.

இதனை கோலுவுட் வட்டாரங்களில் காதலும் உண்மைதான் என்றும் இருவரும் அடுத்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப்  போவதாக பேச்சு எழுந்துள்ளது. அங்காடி நடிகை அவருடைய வீட்டாரிடம் இது பற்றி தெரிவித்து அனுமதியும்  வாங்கிவிட்டாராம். வெற்றி நடிகர் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும், அங்காடி நடிகைதான் ஒரு  வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
 
வெற்றி நடிகர் முஸ்லிம் மதத்தைத் தழுவி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் அங்காடி நடிகை இந்து முறைப்படிதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி விட்டாராம்.