திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 21 ஆகஸ்ட் 2021 (16:35 IST)

கல்யாணம் பண்ணா இப்புடி தான் பண்ணுவேன்... வயசாகியும் அடம்பிடிக்கும் த்ரிஷா!

தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகள் கடந்த பின்னும் ஓரளவுக்கு மார்கெட் கொண்டு நல்ல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 
இருந்தும் அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா என்பது அவருக்கே டவுட்டா இருக்கிறது என்றே சொல்லலாம். இதனால் அவரது குடும்பத்தினர் திருமணம் செய்துக்கொள்ள கூறி அட்வைஸ் செய்து வருகிறார்களாம். த்ரிஷாவோ தான் கமிட்டாகியிருக்கும் 6 படங்கள் வெளிவந்து அந்த படங்கள் ஹிட் அடித்து மீண்டும் முன்னணி நடிகை என்று மார்க்கெட் உச்சத்தை தொட்டால் மட்டுமே கல்யாணம் என கூறிவிட்டாராம். அதுவும் அம்மணி காதலித்து தான் திருமணம் செய்துக்கொள்வேன் என அடமெண்டா கூறிவிட்டாராம். 38 வயசுல இனி காதலித்து கல்யாணம் பண்றதுக்குள்ள அயோ.... என அவரது குடும்பத்தினரே சலிப்பாகிவிட்டனராம்.