என் உடலை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்வேன் – வாரிசு நடிகை ஓப்பன் டாக்
“என் உடலை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என வாரிசு நடிகை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
மிகப் பிரமாண்டமாக உருவாக உள்ள படத்தில் இருந்து உலக நாயகனின் மூத்த மகள் விலகியதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் இதுகுறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எழுதி வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த வாரிசு நடிகை, “என் முகம், உடலை வைத்து நான் என்ன செய்தாலும், அது மற்றவர்களுக்குத் தேவையில்லாதது. நடிகையாக இருப்பவரின் உடலில் மாற்றங்கள் வருவது இயற்கைதான். ஒரே மாதிரியான உடலமைப்பை மெயிண்டெய்ன் செய்ய முடியாது. கதாபாத்திரத்துக்காக உடலை ஏற்றவோ, இறக்கவோ வேண்டியிருக்கும். சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.