லண்டன் நடிகையின் புது பிசினஸ்
லண்டனில் இருந்து வந்து தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை புது தொழில் ஒன்றை தொடங்கியுள்ளாராம்.
சம்பாதிப்பது முக்கியமல்ல, அதைச் சேர்த்து வைப்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது. கமல், ஆர்யா போன்ற ஒருசில நடிகர்கள்தான், சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே முதலீடு செய்கிறார்கள். மற்ற நடிகர்கள் அப்படியில்லை. நடிகைகளை எடுத்துக் கொண்டால், மருந்துக்கு கூட சினிமாவில் முதலீடு செய்பவர்கள் யாரும் இல்லை.
லண்டனில் இருந்து வந்து தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் குச்சி நடிகை, அதையும் தாண்டி ஒருபடி முன்னேறி விட்டார். சென்னை மற்றும் லண்டனில் உள்ள இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கு இடையே தூதராகச் செயல்பட்டு வருகிறாராம். லண்டனில் உள்ளவர்கள் இங்கு வீடு வாங்கவும், இங்குள்ளவர்கள் லண்டனில் வீடு வாங்கவும் பாலமாக இருக்கிறாராம். டீல் முடிந்ததும், பெரிய தொகை கமிஷனாக கிடைக்கிறதாம்.