திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 ஜூன் 2017 (10:38 IST)

வாட்ஸ் ஆப் ஷெட்யூலர்: தெரியாதவங்க தெரிஞ்சிகோங்க!!

வாட்ஸ் ஆப் செயலியில் மெசேஜ்களை விரும்பிய நேரத்தில் அனுப்ப வழி செய்யும் பல்வேறு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. 


 
 
கூகுள் பிளே ஸ்டோர் சென்று ஷெட்யூலர் ஃபார் வாட்ஸ் ஆப் (Scheduler for WhatsApp) மற்றும் ஷெட்யூலர் நோ ரூட் (Scheduler NO ROOT) செயலிகளை டவுன்லோடு செய்யவும். 
 
செயலியை இன்ஸ்டால் செய்து செட்டிங்ஸ் - அக்சஸபிலிட்டி -சர்வீசஸ் சென்று சேவையை எனேபிள் செய்யவும்.
 
வாட்ஸ் ஆப் மெசேஜ்களை ஷெட்யூல் செய்ய ஷெட்யூலர் ஃபார் வாட்ஸ் ஆப் மெசேஜை கிளிக் செய்து பின்னர், வாட்ஸ் ஆப் க்ரூப் அல்லது காண்டாக்ட்டினை தேர்வு செய்யவும்.
 
இனி மெசேஜ் அனுப்பப்பட வேண்டிய தேதி மற்றும் நேரத்தை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் மெசேஜை உருவாக்கினால் மெசேஜ் ஷெட்யூல் செய்யப்பட்டு விடும். 
 
ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டிருந்தால் இந்த வசதி வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.