வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (18:31 IST)

திடீரென ­­முடங்கிய வாட்ஸ் ஆப் – உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !

வாட்ஸ் ஆப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்ப முடியாமல் சிரமம் இருந்ததால் பயனாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

வாட்ஸ் ஆப் மெஸெஞ்சரை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியின் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் ஆகியவற்றை அனுப்பலாம்.

அதுமட்டுமில்லாமல் இணைய வசதி இருந்தால் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ காலும் செய்ய முடியும். இத்தனை வசதிகள் இருப்பதால் உலகளவில் அதிக அளவிலான மக்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் வாட்ஸ் ஆப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்மந்தமாக வாட்ஸ் ஆப் நிறுவனம் எந்த தகவலும் தெரிவிக்காததால் வாட்ஸ்ஆப்டௌன் என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர்.