செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (17:24 IST)

டேட்டாவுடன் சோனி லிவ் ஓடிடியும் இலவசம்..! – வோடபோனின் அசத்தல் அறிவிப்பு!

Vodafone Idea
பிரபல நெட்வொர்க் நிறுவனமான வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு டேட்டாவுடன் ஓடிடி வசதியையும் தரும் ப்ளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பிரபல நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது வோடபோன் ஐடியா. வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு ப்ளான்களை வழங்கி வரும் வோடபோன் ஐடியா தற்போது புதிய ப்ளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.100க்கான இந்த பேக்கின் மூலம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 10 ஜிபி டேட்டாவை பெறலாம். மேலும் அந்த 30 நாட்களுக்கு சோனி லிவ் ஓடிடி தளத்தை மொபைல் மற்றும் டிவி இரண்டிலுமே பார்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். சோனி லிவ் ஓடிடியின் ஒரு மாத ப்ரீமிய தொகை ரூ.299 ஆகும். ஆனால் இந்த போஸ்ட்பெய்ட் பேக் மூலம் ரூ.100க்கு சோனி லிவ் பார்க்க முடியும்.

அதேபோல ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.82க்கு ஒரு பேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த ரீசார்ஜ் பேக்கின் மூலம் 14 நாட்கள் வரை வேலிடிட்டி உடைய 4 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு சோனிலிவ் ஓடிடி பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது.