திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (18:43 IST)

ஸ்மார்ட்போனை உளவு பார்க்க இளைஞர்களுக்கு ‘துட்டு’ தந்த பேஸ்புக் ...ஆய்வில் தகவல்

இன்றைய இளைஞர்கள் ஸ்மாட் போனில்லாமல் ஒருநாள் கூட இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களின் மிக முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள்தான்.
இந்நிலையில் இளைஞர்களின் ஸ்மார்ட்போனை கண்காணிக்க  வேண்டி பேஸ்புக் நிறுவனமானது அவர்களுக்கு  ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு பணம் தந்துள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
பேஸ்புக் நிறுவனமானது தங்கள் பயனாளர்கள் எவ்வளவு நேரம் அதில் கழிக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்வதற்காகவும், இதில் எந்த சமூக வலைதளத்தை அவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியவும் கடந்த 2013 ஆம் ஆண்டு வரை onavo protect என்ற செயலியை பேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தி வந்தது.
 
இந்த செயலியை பயன்படுத்தி வந்ததன் மூலம் பேஸ்புக் செயலி தன்னை சிறப்பாக மேம்படுத்திக் கொண்டதாகவும் தகவல் வெளியாகிறது.
 
தற்போது இது கூகுள் பிளே ஸ்டோர்களுக்கு எதிரானது என ஆப்பிள் நிறுவனம் புகார் தெரிவித்ததை அடுத்து அச்செயலி நீக்கப்பட்டது. 
 
இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளில் 13 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20 அமெரிக்க டாலர் பணத்தை செலுத்தி உள்ளதாகவும் டெக் கிரஞ்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
இந்நிலையில் ஏற்கனவே தகவல் திருட்டு , பங்குதாரர் பிரச்சனை, என்று உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் ல்பேஸ்புக் நிறுவனத்திற்கு தற்போது மேலும் ஒரு பிரச்சனை இந்த ஆய்வின் மூலமாக வந்துள்ளதாகத் தெரிகிறது.