’வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட வாய்ப்பு ’- ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை

upi
Last Updated: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (19:47 IST)
அதேபோல் நெடுவரிசையில் வங்கியில் நின்று பணம் கட்ட, பணம் அனுப்ப ஒருநாள் வேலைக்கு லீவு போட வேண்டும் என்ற அவசியம் இன்று இல்லை. இன்றைக்கு யூபிஐ(up)i மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.
 
ஆனால் இப்படி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதால் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக பணம் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
ஆர்பிஐ. அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் எனி டெக்ஸ் என்ற ஆப் உதாரணத்தை காண்பித்து ஒரு வாடிக்கையாளர் பணப்பரிமாற்றத்துக்காக அந்த ஆப்பௌ டவுன்லோடு செய்தால் போதும். அதில் தரப்படும் அனுமதியைக் பெற்று அந்த மொபைலை குறிப்பிட்ட நிறுவனம் தம் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அதாவது யுனிஃபைடு பேமண்டு இண்டர்ஃப்பேஸ் எனும் யுபிஐ மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக எடுத்துவிட  முடியும் என்று தெரிவித்துள்ளது.இதுபோன்ற டிஜிட்டல் ஆப்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :