இன்டர்நெட் இன்றி பேடிஎம் சேவை!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 7 டிசம்பர் 2016 (17:18 IST)
இன்டர்நெட் இல்லாமலே பண பரிவர்த்தனை செய்யும் வசதியை பேடிஎம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 
 
பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது குறித்த  அறிவிப்புக்குப் பிறகு, பேடிஎம் இ-வாலட் சேவை பயன்பாடு அதிகரித்துள்ளது. 
 
அதற்கேற்ப, அந்த நிறுவனமும் பல புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. பாதுகாப்பு வசதியையும் மேம்படுத்தியது. 
 
மேலும், சேவைக்கட்டணம் இல்லாத பரிவர்த்தனை என பல அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
 
இந்நிலையில், இன்டர்நெட் இல்லாமலே பேடிஎம் இ-வாலட் பயன்படுத்தும் வகையில் 1800-1800-1234 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை அறிவித்துள்ளது. 
 
பேடிஎம் இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்கள் மூலம் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும். 


இதில் மேலும் படிக்கவும் :